விடுவிக்கப்பட்ட காணிகளை மீள கையகப்படுத்தும் படையினர் – சுமந்திரன் நேரில் ஆய்வு

0

யாழ்.வலி,வடக்கில் கடந்த ஆட்சிக் காலத்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட பகுதிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோருடன் இணைந்து அப்பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நோக்குடன் , அக்காணிகளில் “இது இராணுவத்தினருக்கு சொந்தமான காணி” என எழுதிய பலகைகளை நாட்டியுள்ளனர். அதனால் அப்பகுதி மக்களிடம் குழப்பம் நிலவி வந்தது.

அத்துடன் இராணுவத்தினர் பலகை நாட்டிய காணி உரிமையாளர்கள் , வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் வலி.வடக்கு பிரதேச செயலர் ஆகியோரிடமும் முறையிட்டு இருந்தனர்.

இந்நிலையிலையே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here