விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பாளர் காலமானார்

0

நீண்டகாலம் சுகவீனமடைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ மொழி பெயர்ப்பாளராகச் செயற்பட்டிருந்த ஜோர்ஜ் மாஸ்டர் எனப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் தனது 85 வயதில் காலமானார்.

கடந்த 1936 ஆம் ஆண்டு டிசம்பர்- 25 ஆம் திகதி பிறந்த அவர் அஞ்சல் அதிபராகப் பல மாகாணங்களிலும் செயற்பட்டிருந்தார். 1994 ஆம் ஆண்டு அஞ்சல் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மொழி பெயர்ப்பாளராகச் செயற்பட்டிருந்தார்.

இந்தநிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலுமிருந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை-07ஆம் திகதி ஜோர்ஜ் மாஸ்டர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here