விஜய் தரப்பில் இருந்து அஸ்வினுக்கு கிடைத்த உதவி!

0

’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரிக்கும் படத்தில் ’குக் வித் கோமாளி அஸ்வின் ஒப்பந்தமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவர் தயாரிக்கும் அடுத்தடுத்த மூன்று படங்களிலும் அஸ்வின் தான் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் விஜய்யின் மேனேஜர் தற்போது அஸ்வினுக்கும் மேனேஜர் ஆக மாறி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் பெரிய நிறுவனங்களின் படங்களில் அஸ்வினை நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அஸ்வின் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

விஜய் மேனேஜரின் முயற்சியால் பெரிய நிறுவனங்களின் தயாரிப்பில் அஸ்வின் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. அஸ்வினுக்கு ஏற்கனவே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்துள்ளதை அடுத்து அதனை பயன்படுத்தி அவர் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் விரைவில் இணைந்து விடுவார் என்று கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here