விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்!

0

தமிழ் சினிமாவின் பழம்பெறும் இயக்குனரான எம்.தியாகராஜன் சாலையோரமாக இறந்து கிடந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் 1991ல் வெளியான படம் மாநகர காவல். இந்த படத்தை எம்.தியாகராஜன் இயக்கியிருந்தார். இதுதவிர மேலும் பல படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரே உள்ள சாலை ஓரமாக இயக்குனர் எம்.தியாகராஜன் இறந்து கிடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here