விக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா??

0

நடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸாகும் என அறிவிக் கப்பட்டு இருந்த நிலையி இன்னும் பணிகள் முடியாத காரணத்தால் இரண்டு மாதங்கள் தள்ளி ஜூலை மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கோப்ரா படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகவுள்ளதாக இணயதளத்தில் தகவல் வெளியானது.

இதுகுறித்துத் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ கூறியுள்ளதாவது: கோப்ரா படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பது பொய்யான் தகவல் எனக் கூறியுள்ளது.

கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி,மற்றும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here