‘விக்ரம்’ படப்பிடிப்பு நிறைவு விழாவில் சகலகலா வல்லவன் கொண்டாட்டம்!

0

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் பின்னணியில் கமலஹாசன் நடித்த ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ’இளமை இதோ இதோ’ என்ற பாடல் ஒலிக்க படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ’விக்ரம்’ படப்பிடிப்பு நிறைவு விழாவில் கமல்ஹாசன் கேக் வெட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், சந்தானபாரதி உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பதும் தெரிந்ததே. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here