விக்ரம் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகலா?

0

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.

இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் லோகேஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சத்யன் சூரியன் இந்த படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் சம்பளம் மற்றும் தேதிகள் ஆகிய பிரச்சனைகள் உள்ளதால்தான் அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here