‘விக்ரம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

0

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

இந்த படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னர் ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு போலீஸ் யூனிபார்ம் போட்டு போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்தார். அதன் பின்னர் அவர் ’தூங்காவனம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தாலும் போலீஸ் யூனிபார்மில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் போலீஸ் யூனிபார்மில் கமலஹாசன் ‘விக்ரம்’ படத்தில் நடிக்க உள்ளார். இதனை அடுத்து இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளார் என்பதும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இது உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக 60 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு ரெஸ்டாரன்ட் உள்ளேயே எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படம் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here