வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபாய் வழங்க நடவடிக்கை

0

இலங்கையில் கடந்த வாரங்களில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசினால் குறைந்த வருமானம் பெறும் சமுர்த்தி பயனாளர்ளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது.

சமுர்த்தி பயனாளர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு காரணமாக முழுமையாக வருமானத்தை இழந்த நபர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து சமூர்த்தி பயனாளர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கவில்லை என கூறி தொடர்ந்து பல தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க கோரி பாணத்துறை, பின்வத்தை மீனவர்கள் பலர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here