வாழைச்சேனையில் காணாமல் போன பெண்ணின் சடலம் சாக்கு மூடையில்

0

வாழைச்சேனை வர்த்தக நிலையமொன்றில் சாக்கு மூடையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வர்த்தக நிலையத்தில் சந்தேகத்திற்குரிய விதத்தில் இரண்டு சாக்கு மூடைகள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது வாழைச்சேனை பகுதியில் காணாமல் போன 55 வயதான பெண்ணின் சடலமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

காணாமல் போன பெண் வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளதுடன், வீடு திரும்பாத காரணத்தினால் அவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும், முச்சக்கர வண்டி சாரதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பெண்ணின் மரணம் தொடர்பில் நீதிவான் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இன்று நடைபெறவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here