வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட சோதனை நடவடிக்கைகள்…

0

இலங்கையில் தினந்தோறும் இடம்பெறும் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி விபத்துக்களினால் 5-6 பேர் உயிரிழக்கின்றனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்துக்கொள்வதற்காக, இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளின் தரம் மற்றும் அவை இயங்கும் நிலை என்பவற்றை ஆராய்வதற்கே இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த சோதனையின் நோக்கமாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here