வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை உயிரிழப்பு

0

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த வான் இன்று (31) அதிகாலை 1 மணியளவில் இரவு பள்ளம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சாரதியின் கவனயீனமான செயற்பாடே விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளதுடன், சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here