வாகனம் வைத்திருப்பவர்களுக்கு பொலிஸாரின் விஷேட அறிவிப்பு

0

கொழும்பில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்கள் மீது வேண்டுமென்றே விபத்துக்களை ஏற்படுத்தி கப்பம் பெறும் நபர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே தனது முச்சக்கரவண்டியை மற்ற வாகனங்களுடன் மோத வைத்து கப்பம் பெறும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரான சாரதி நுகேகொடை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் வாகனத்தை செலுத்தி வந்துள்ளார் என விசாரரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இரண்டு மாதங்களுக்குள் 15 சாரதிகளிடம் இருந்து 300,000 ரூபாவை விடவும் அதிக பணத்தை பெற்றுக்கொண்டுளள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான மோசடி கும்பல்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் வலியுஞத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here