வவுனியாவில் மர்மமாக பலியாகிய பாடசாலை மாணவன்….

0

வவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்று 5 ஆம் திகதி திங்கிழமை இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.

உறங்கிக்கொண்டிருந்த மகனை இன்று காலை எழுப்புவதற்காக பெற்றோர் சென்ற நிலையில் மகனை காணவில்லை.

பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் முகப்பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடப்பதனை கண்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இன்று 06.07.2021 காலை வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here