வவுனியாவில் பெண்ணை கடத்தி கப்பம் கோரிய நால்வர் கைது!

0

வவுனியா, வாரிகுட்டியூரில் இருந்து 55 வயதுடைய பெண்ணை கடத்தி 5 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணொருவரை கடத்தி சென்று பெண்ணின் மகளை தொலைபேசியில் அழைத்து 5 இலட்சம் ரூபாய் பணம் கேட்ட குழுவொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 26 தொடக்கம் 49 வயதுக்குட்பட்ட வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க குறித்த தொகையை வழங்காவிட்டால் கொலை செய்து விடுவதாக சந்தேகநபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here