வவுனியா, நெடுங்கேணி – சேனைக்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய சத்தியகலா (வயது 31) என்ற பெண் சம்பவ மரமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.ள்ளனர்.