வல்வெட்டித்துறையில் தனிமையில் இருந்த பெண்ணிற்கு ஏற்பட்ட அவலம்! சந்தேகநபர் கைது

0

யாழ்ப்பாணம்-  வல்வெட்டித்துறை  பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அத்துமீறி வீடு புகுந்த 30 வயதுடைய  குறித்த  சந்தேகநபர், வீட்டில் தனிமையில் வாழ்ந்த 35 வயதுடைய பெண்ணை வன்புணர்ந்துள்ளார்.

குறித்த சம்பவத்தினால் படுகாயமடைந்த பெண்ணை, அயலவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அதன்பின்னர் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here