வலிமை பட ரிலீஸுக்கு முன் புதிய சாதனை…

0

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக போனி கபூரை கேலி செய்யும் விதமாக சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும், அரசியல் மேடைகள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் சுற்றி வந்தனர். இதையடுத்து மே 1 அன்று அஜித் பிறந்தநாளில் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அஜித்குமார் நடித்துவரும் வலிமை படத்திற்கு புக் மை ஷோவில் இதுவரை சுமார்
10 லட்சம் பேர் புக் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் எந்தவொரு படத்திற்கும் இல்லாத வகையில் இப்படத்தைப் பார்க்க புக் மை ஷோவில் 1 மில்லியன் பேர் புக் செய்துள்ளது சினிமாத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here