வரலாற்று வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்!

0

துபாயில் நேற்று நடந்த உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது.

இதற்கு முன் வரை உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் 12 போட்டிகளில் மோதியுள்ளன.

இந்த 12 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிப்பெற்றுள்ளது. நேற்று நடந்த 13வது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைத்தது.

இந்த வரலாற்று வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டடி வருகின்றனர்.

அதேசமயம், பல கேப்டன்களால் முடியாததை சாதித்த பாபர் அசாமை பலரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here