வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சவம்!

0

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இறுதி பங்குனி திங்கள் உற்சவம் இன்று (திங்கட்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்றது.

பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர்.

குறிப்பாக கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இலங்கையின் அருள்மிகுந்த கண்ணகை அம்மன் ஆலயமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் பங்குனி திங்கள் உற்சவம் மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்படுகிறது.

இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகைதந்து பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்தோடு, தமது நேர்த்திக்கடன்களையும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் நிறைவேற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here