வரலாறு காணாத வெப்பம்! நெருப்பு, அடுப்பு இல்லாமல் ஆபாயில் ஆகும் முட்டை

0

கிரீஸ் நாட்டில் கொளுத்தும் வெயிலில் நெருப்பு, மற்றும் அடுப்பு இல்லாமலே திறந்த வெளியில் முட்டை ஆப்-பாயில் ஆக மாறும் வீடியோ வெளியாகி உள்ளது. அங்கு கடந்த 30 ஆண்டுகளில் காணப்படாத வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

வெயிலின் உஷ்ணத்தை குறைக்க கடற்கரை, நீர் வீழ்ச்சி உள்ளிட்ட தலங்களை நோக்கி பொது மக்கள் படையெடுத்து வருகின்றனர். தலைநகர் ஏதென்ஸ்சில் உச்சபச்ச வெப்பமாக 44 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு காட்டுத் தீ வனத்தை கபளீகரம் செய்து வருவதால் மின்சார பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here