வரலாறு காணாத கொடுமையில் ஆப்கன் குழந்தைள்! – யுனிசெஃப் அமைப்பு வேதனை!

0

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள குழந்தைகள் வரலாறு காணாத இடர்பாடுகளை சந்திக்க உள்ளதாக யுனிசெஃப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பல உள்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர். அதேசமயம் ஆப்கானிஸ்தானிற்குள் தண்ணீர் தட்டுப்பாடு போன்றவையும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் ஆப்கன் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பான யுனிசெஃப் ”கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி வருகிறது. ஆப்கன் குழந்தைகள் பலர் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் அவர்களது கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் உள்ள குழந்தைகளும் ஆரோக்கியமான சுற்றுசூழலை இழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது தாலிபான்கள் தலையீடால் போலியோ, டெட்டானஸ் மற்றும் பல நோய்களுக்கான மருந்துகளை குழந்தைகளுக்கு கிடைக்க செய்தல் உள்ளிட்டவற்றிலும் சிக்கல் எழுந்துள்ளதாகவும், வரலாறு காணாத சிரமங்களை ஆப்கன் குழந்தைகள் சந்தித்துள்ளதாகவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here