வயிற்றில் வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

0

இந்தியாவில் குஜராத்தை சேர்ந்த 56 வயது மதிக்கத்தக்க அப்பெண் நீண்ட வருடங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

வயிறு பகுதி மட்டும் பெரிதாகியுள்ளது.

நாளடைவில் இன்னும் பெரிதாக, ஸ்கேன் செய்து பார்த்ததில் கட்டி வளர்வது தெரியவந்தது.

ஆயுர்வேதிக் உட்பட பல மருத்துவ முறைகளை பின்பற்றிய போதும் கட்டி வளர்ந்துகொண்டே சென்றது.

சுமார் 18 ஆண்டுகளாக எழுந்து நடக்க முடியாமல், படுக்கை அறையை விட்டே வெளியே செல்ல முடியமால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யலாம் என முடிவெடுத்த அப்பெண்ணின் குடும்பத்தினர், மருத்துவரை அணுகியுள்ளார்.

இதனைதொடர்ந்து குடும்பத்தினரின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர், சுமார் 8 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் வயிற்றிலிருந்த கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

இதனால் அவரது எடை சுமார் 54 கிலோகிராம் குறைந்துள்ளது.

அதனை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் நலமாக இருந்ததால் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here