வனிந்து ஹசரங்கவுக்கு கொவிட் தொற்று உறுதி!

0

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

போட்டி இடம்பெறுவதற்கு முன்னதாக வழமை போல இன்று 15 ஆம் திகதி காலை ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் முன்னெடுக்கப்பட்டது.

அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவர் இன்றைய போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

அதன்படி, கொவிட்-19 தொற்றை மேலும் உறுதிபடுத்த, வனிந்துவுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணியில் மேலும் இரண்டு வீரர்களுக்கு முன்னதாக தொற்று உறுதியானது.

துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு இவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியாகியிருந்தது.

இவர்களில் குசல் மெண்டிஸ் தற்போது குணமடைந்துள்ளார்.

இந்நிலையில், அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here