வனிதாவின் ஜாதகத்தை அலசும் குருஜி!

0

நடிகை வனிதாவின் அடுத்த கணவர் யார் என்பதை அவருடைய ஜாதகத்தை கணித்து குருஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்தராஜன் ஆகிய 2 பேரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரையும் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் நான்கே மாதங்களில் அந்த திருமணமும் முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வனிதாவுக்கு மீண்டும் ஒரு திருமணம் நடக்கும் என்றும் அவரது ஜாதகத்தில் திருமண வாய்ப்பு இருப்பதாகவும் ஜோதிடர் குருஜி தெரிவித்துள்ளார். மேலும் வனிதாவின் அடுத்த கணவரின் பெயர் எஸ் என்று ஆரம்பிக்கும் என்றும் குருஜி தெரிவித்துள்ளார்.

அதேபோன் வனிதா அரசியலில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகவும் அரசியலில் அவர் ஒரு ஜெயலலிதா போன்று வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here