வட்டுக்கோட்டையில் திறந்து வைக்கப்பட்ட புதிய தபாலகம் !

0

புதிதாக அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை அஞ்சல் அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

11.6 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த அஞ்சல் அலுவலகமானது அஞ்சல்துறை அபிவிருத்து ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி மதுமதி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சல் அலுவலக திறப்பு நிகழ்வில் அஞ்சல் துறை அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அஞ்சல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில், ஊடகம்,தபால்த்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஜெகவீர நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் வடக்கு மாகாண தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here