Home இலங்கை வடமராட்சியில் துப்பாக்கிப் பிரயோகம் இருவர் படுகாயம்!

வடமராட்சியில் துப்பாக்கிப் பிரயோகம் இருவர் படுகாயம்!

0

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் வெளியாகாத நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!