வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

0

வடக்கு மாகாணத்தில் தற்போது கொரோனாத் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அனைத்து பாடசாலைகளுக்கும் முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்காக மாணவர்களை ஒருங்கிணைத்து பிரார்த்தனை நடத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி எதிர்வரும் 31.05.2021 வரை வகுப்பறைகளிலேயே காலை நேர பிரார்த்தனைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here