வடக்கில் மேலும் ஒரு பல்கலைகழகம்! ஆகஸ்ட் 11ல் அங்குரார்ப்பணம், ஜனாதிபதி வருகிறார்..

0

யாழ்.பல்கலைகழக வவுனியா வளாகம், வவுனியா பல்கலைகழகமாக ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் தரம் உயர்த்தப்படும் நிலையில், அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கலந்துகொள்ளவுள்ளார்.

நேற்று வவுனியாவில் நடைபெற்ற வடக்கின் உயர் கல்வி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்குகொண்ட கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

11 ஆம் திகதி நடைபெறும் அங்குராட்பண நிகழ்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே,வவுனியா வளாகம் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் பல்கலைக்கழகமாக செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here