வடக்கில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா!

0

வடமாகாணத்தில் 32 பேர் உட்பட, யாழ். மாவட்டத்தில் 15 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 163 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 04 பேர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 02 பேர், நொதேர்ன் சென்றல் வைத்தியசாலையில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளம் மங்கள எளிய அம்பலவெளி பகுதியில் புகையிரத பாதை சேதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here