வடக்கில் மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தியது சீனா!

0

வடக்கில் உள்ள தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின் உற்பத்தி திட்டங்களை சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மூன்றாம் தரப்பொன்று வெளியிட்ட பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக இந்த திட்டங்களை Sino Soar Hybrid Technology என்ற சீன நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக அந்தப் பதிவில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கு பதிலாக மாலைத்தீவுகளிலுள்ள 12 தீவுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான உடன்படிக்கை, அந்நாட்டு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்திட்டத்தை ஆரம்பிக்க அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here