வடக்கில் சடுதியாக அதிகரித்த கொரோனா !!

0

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2,661 பேர் கொரோனா நோய்த்தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

எனினும் நவம்பர் மாதத்தில் 3,049 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒக்டோபர் மாத்தில் கொரோனா நோயினால் 71 பேர் உயிரிழந்தனர்.

எனினும் நவம்பர் மாதத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 பேராகக் குறைவடைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகப்படியாக 842 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 825 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் முறையே 713, 540, 129 பேர் நவம்பர் மாதத்தில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதம் 75 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மன்னார் மாவட்டங்களில் தலா 5 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் என 49 பேர் கொரோனா நோயினால் நவம்பர் மாதத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 41,952 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 890 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here