வடக்கில் கால் பதிக்கும் சீனர்கள் – சிறீதரன் எம்.பி எச்சரிக்கை

0

வடக்கில் சீனர்களின் ஆக்கிரமிப்பு தற்போது அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சீனா கடல் அட்டை பண்ணை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இன்றைய தினம் சென்றுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு அனலைதீவு நயினாதீவுகளில் சீனர்கள் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள நிலையில் தற்பொழுது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடலட்டை வளர்ப்பதாக கூறி அங்கும் கால் பதித்துள்ளனர்.
யாழ் பாசையூர் மீனவர்கள் மற்றும் கிளிநொச்சி கௌதாரிமுனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்கான முன் வைத்த உரிமங்கள் மறுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது சீனர்கள் அங்கு வந்துள்ளனர்..

இவற்றினை சாதாரணமாகப் பார்க்கும்போது சீனாவிற்கு கடல் அட்டை ஏற்றுமதி இடமாகத்தான் தெரியும் ஆனால் இதன் பின் பாரிய அளவு அரசியல் செயற்பாடுகள் உள்ளன.

இவ்வாறான விடயம் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரம் அல்லாது அண்மையில் உள்ள இந்தியாவிற்கு கூட ஓர் பாரிய அச்சுறுத்தலை வழங்குகின்ற செயற்பாடாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here