வங்காளதேசத்தில் இடைவிடாமல் கனமழை பெய்தது.
20 லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
வடகிழக்கு பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன.
வீடுகளில் சிக்கியுள்ளவர்களை படகுகளை கொண்டு மீட்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
உயர்நிலை மாணவர்களுக்கு நடத்தவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பள்ளிகளில் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
கால நிலை மாற்றமே பருவம் தவறிய மழைக்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலேட் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணி, அத்தியாவசிய பொருட்கள் விநியோக பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.