லொட்டரியில் விழுந்த பரிசு…. பெரும் செல்வந்தராகிய பெண்

0

அமெரிக்காவின் Auckland பகுதியை சேர்ந்தவர் Laura Spears(55).

இவர் Mega Million என்ற நிறுவனத்தில் இருந்து ஒரு லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 31 திகதி அன்று டிரா செய்துள்ளது.

அதில் விழுந்த எண்களும் Laura லொட்டரி டிக்கெட்டின் எண்களும் ஒன்றாக பொருந்தியுள்ளது.

அதன்படி, அவருக்கு லொட்டரியில் 1 மில்லியன் டொலர் விழுந்தது.

ஆனால் Laura Mega Player என்பதால் பரிசு தொகை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு 3 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது.

இந்நிலையில் இவர் வெற்றி பெற்ற விவரம் குறித்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

அவருடைய மின்னஞ்சல் இன்பாக்ஸில் டெலிவர் ஆகாமல் அதற்கு பதிலாக அவருடைய ஸ்பாம் பாக்ஸில் டெலிவர் ஆகியுள்ளது.

தனது ஸ்பேம் பாக்ஸில் வேற எதோ ஒரு மின்னஞ்சலை தேடும் போது லாராவுக்கு மூன்று மில்லியன் டாலர்கள் பரிசாக வெற்றி பெற்றிருப்பது குறித்து தெரியவந்தது.

இதையடுத்து அவர் மகிழ்ச்சியில் கூறியதாவது, முகநூலை பார்த்து நானும் ஒரு லொட்டரி டிக்கெட் வாங்கினேன்.

அதன்பிறகு நான் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் தற்போது எனக்கு கிடைத்த பரிசு தொகையை கண்டு முதலில் நான் அதிர்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here