உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பினர் நாடான லிதுவேனியா, உக்ரைன் மீது ரஷ்ய இராணுவத்தின் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை அடுத்து அவசரகால நிலையை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
ரஷ்ய நட்பு நாடான பெலாரஸுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் லிதுவேனியா, இன்று பிற்பகல் முதல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த லிதுவேனியா ஜனாதிபதி Gitanas Nauseda தெரிவிக்கையில்,
இன்று நான் அவசரகால நிலையை விதிக்கும் ஆணையில் கையெழுத்திடுவேன் என அறிவித்துள்ளார்.
லிதுவேனியா நேட்டோவின் பிரிவு 4ஐ செயல்படுத்தக் கோரும், இது கூட்டணியின் உறுப்பினர் அச்சுறுத்தப்பட்டால் அவசர ஆலோசனைகளை வழங்கும் என Gitanas Nauseda தெரிவித்துள்ளார்.