லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

0

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியை தெஷார ஜயசிங்க இராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதன்மை எரிவாயு வழங்குனரான Litro Gas Lanka, எரிவாயு சிலிண்டர்களின் பற்றாக்குறை, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு மற்றும் உற்பத்திப் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

தெஷார ஜயசிங்கவின் தலைமையின் கீழ் இயங்கும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here