லிட்ரோ எரிவாயு நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு: அவசர இலக்கம் அறிமுகம்!

0

நாட்டில் எரிவாயு சம்பந்தமான கசிவு, வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், எரிவாயு சம்பந்தமாகச் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் அதற்காக அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் பொதுமக்கள் 1311 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here