லண்டன் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் குத்தி கொலை…

0

தெற்கு லண்டனில் பிரிக்ஸ்டன் ரயில் நிலையம் அருகே 20 வயது இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரிக்ஸ்டன் நிலத்தடி குழாய் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் நேற்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து வலியில் துடித்துக்கொண்டிருந்த அந்த இளைஞரைப் பார்த்த சிலர், காவற்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சில நிமிடங்களில் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இரண்டும் வந்து முயற்சித்த போதிலும், அந்த நபர் உயிரிழந்துள்ளனர்.

அவர் யார் என்பது இன்னும் முறையான அடையாளம் காணப்படவில்லை.

பிரதே பரிசோதனை ஏற்பாடு செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here