லண்டன் கால்வாயில் மிதந்து வந்த பிறந்த குழந்தையின் சடலம்

0

பிரித்தானியாவில் வடமேற்கு லண்டனில் உள்ள கிராண்ட் யூனியன் கால்வாயில் பிறந்த குழந்தையின் சடலம் மிதந்துள்ளது.

ஓல்டு ஓக் லேன் அருகில் Willesden மற்றும் Park Royal இடையில் உள்ள கால்வாய் நீரில் ஞாயிற்றுக்கிழமை மதியம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தை சேர்ந்த பொலிஸார் 999 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு குழந்தையின் தாயை கண்டுபிடிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரிக்கும் போது அருகிலுள்ள சாலைகள் மற்றும் பாதைகள் சுற்றி வளைக்கப்பட்டன.

மதியம் 1.19 மணியளவில் குழந்தை தண்ணீரில் காணப்பட்டதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

குழந்தையை அடையாளம் காண்பதற்காக இங்கிலாந்து முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் குழந்தை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா என லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here