லண்டனை உலுக்கிய கோர சம்பவம்! பூ விற்பனையாளரை குத்தி கொன்ற இளைஞர்

0

வடக்கு லண்டனில் கடந்த சனிக்கிழமை பட்டப்பகலில் Tony Eastlake 55 வயது என்ற பூ விற்பனையாளர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் விசாரணையை முன்னெடுத்த பொலிசார், 21 வயதான James Peppiatt என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

James Peppiatt என்பவர் கொல்லப்பட்ட Tony Eastlake-ன் முன்னாள் காதலியின் மகன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tony Eastlake-கும் James Peppiatt-ன் தாயாருக்கும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே பழக்கம் இருந்து வந்துள்ளது.

ஆனால் ஏப்ரல் 1 ஆம் திகதி James Peppiatt-ன் தாயார் மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண்மணி எவ்வாறு மரணமடைந்தார் என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.

தற்போது Tony Eastlake கொலை வழக்கில் சிக்கியுள்ள James Peppiatt ஜூன் 7 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விரிவான விசாரணைக்கு பின்னரே, பூ விற்பனையாளரின் கொலைக்கு காரணம் தெரிய வரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here