லண்டனை அச்சுறுத்தும் மர்ம பொதி….. பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

0

மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலம், வாட்டர்லூ பாலம், ஹங்கர்ஃபோர்ட் மற்றும் கோல்டன் ஜூபிலி பாலங்கள் செவ்வாய்க்கிழமை காலை மூடப்பட்டன.

அத்துடன், வாட்டர்லூ ஸ்டேஷன் மற்றும் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் BFI ஐமாக்ஸ் திரையரங்கிற்கு இடையே சுற்றுவட்டாரப் பகுதியிலும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பெரிய பெட்டி ஒன்று பரபரப்பான சாலை அருகில் காணப்பட்டது.

இந்நிலையிலேயே, முக்கியமான சாலை போக்குவரத்து பொலிசாரால் முடக்கப்பட்டது.

மேலும் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

குறிப்பிட்ட பாதைகளை தவிர்க்க வேண்டும் என்பதுடன், வேறு பாதைகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் சுமார் 11.30 மணியளவில் குறித்த பொதியால் அச்சுறுத்தல் ஏதுமில்லை என பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.

இதனையடுத்து சாலைகள் மற்றும் மூடப்பட்ட நான்கு முக்கிய பாலங்கள் ஆகியவை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here