லண்டனுக்குள் பிரவேசிக்க வேண்டாம்…. பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

0

அயர்லாந்து இளைஞர்கள் இருபதாயிரம் பேர் லண்டனுக்குள் தற்போது பிரவேசித்துள்ளனர்.

மேலும் பல ஆயிரக் கணக்கான அயர்லாந்து இளைஞர்கள் பிரவேசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் டிக்கெட் இல்லாத எவரும் லண்டனுக்குள் வர முடியாது என்று பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Wembley நகரில் யூரோ கால்பந்து போட்டியானது, இன்று மாலை நடக்கிறது.

இதில் இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

எனவே போட்டியை காண்பதற்கு டிக்கெட் இல்லாமல் மக்கள் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

லண்டனின் பெருநகர காவல்துறை துறை உதவி ஆணையர் Laurence Taylor தெரிவிக்கையில்,

எங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், இந்த நிகழ்வை காண்பதற்கு லண்டன் வர மக்கள் விரும்புவது தெரிகிறது.

எனினும் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா விதிமுறைகளின் படி, மதுபான விடுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய நபர்களுக்கு தான் அனுமதி உண்டு என தெரிவித்தார்.

மேலும் விதிமுறைகளை மீறி அதிக அளவில் பொதுமக்கள் கூடினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here