லண்டனில் 2 சிறுமிகள் உட்பட 3 பெண்களை துஷ்பிரயோகம் செய்த இளைஞர்!

0

வடகிழக்கு லண்டனில் மூன்று பாலியல் தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை பெருநகர பொலிஸ் அதிகாரிகள் தேடி வருகின்றனர்

அந்த நபர் 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளையும், 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணையும் குறிவைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நபர் ஜனவரி 20 ஆம் திகதி Tottenham-ல் 15 வயது சிறுமியை அணுகி தனது மொபைல் போனில் ஆபாச படங்களைக் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

அதையடுத்து, பெப்ரவரி 16 ஆம் திகதியன்று, இரவு 7 மணியளவில், அந்த நபர் N16 Stamford Hill பகுதியில் ஒரு 12 வயது சிறுமியை தாக்கி, தனது ஆடைகளை கழற்றி துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

அதே நாளில், இரவு 9 மணியளவில், 20 வயது மிக்க ஒரு பெண் Stamford Hill பகுதியில் ஒரு Pram-ஐ குழந்தையை வைத்து தள்ளிச் செல்லும் வண்டி தள்ளிக்கொண்டு சென்றபோது, அவரை பாலியல் ரீதியான தவறான இடங்களில் பிடித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கத்தி கூச்சலிட்டபோது தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவங்களை விசாரித்த அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களில் எவருக்கும் கடுமையான உடல்ரீதியான பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானதாகவும், மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், உள்ளூர்வாசிகளுக்கு பாதுகாப்பை உறுதியளிப்பதற்காக அப்பகுதியில் கூடுதல் ரோந்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், குற்றவாளியை அடையாளம் கண்டுள்ள பொலிஸ், அந்த நபரின் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தயவுசெய்து எங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று லண்டன் வாழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here