லண்டனில் வன்முறையில் ஈடுப்பட்ட போராட்டக்காரர்கள்! 26 பேர் கைது

0

பிரித்தானியாவில் புதிய பொலிஸ் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் முக்கிய நகரங்களில் பொது மக்கள் “Kill the Bill” எனும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த போராட்டம் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் நிலையில், சனிக்கிழமை மாலை மத்திய லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இணைந்தனர்.

கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் பெருநகர காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை தள்ளிவிட்டதால், திடீரென ஆர்பாட்டக்கார்கள் பொலிஸ் அதிகாரிகளை தாக்கினர்.

பொலிஸ் மீது கற்கள் போன்ற கனமான பொருட்கள் எறியப்பட்டன. இதில் சுமார் 10 அதிகாரிகள் காயமடைந்தனர்.

கலவரம் அதிகரித்த நிலையில், பொலிஸ் மீது தாக்குதல் நடத்துதல், அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக Met பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், ஒரு பெண்ணை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸ், அப்பெண்ணிடம் மிகவும் ஆபத்தான ஆயுதமான கத்தி கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

இந்த போராட்டம் லண்டனில் மட்டுமல்லாமல் பர்மிங்காம், லிவர்பூல், மான்செஸ்டர், பிரிஸ்டல், நியூகேஸில், பிரைட்டன், போர்ன்மவுத், வெய்மவுத் மற்றும் லூட்டன் என பிரித்தானியா முழுவதும் முக்கிய நகரங்களிலும் நடத்தப்பட்டுவருகிறமை குறிப்பிட்க்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here