லண்டனில் மிட்டாய்களில் கலக்கப்படும் கஞ்சா பெற்றோருக்கு பொலிஸ் எச்சரிக்கை

0

தெற்கு லண்டனிலுள்ள Sutton பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் மாணவிகள் சிலர் திடீரென வாந்தி எடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில், அவர்கள் கஞ்சா கலந்த மிட்டாய்களை உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

பார்ப்பதற்கு சாதாரண மிட்டாய்கள் போல் காணப்படும் அந்த மிட்டாய்களில் கஞ்சா கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த மிட்டாயை சாப்பிடும்போது, கஞ்சா புகைக்கும்போது என்ன விளைவுகள் ஏற்படுமோ, அதே விளைவுகள் ஏற்படும் என மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

ஆக, அந்த மிட்டாயை சாப்பிட்டவர்களில் பலருக்கு, வாந்தி மற்றும் திடீர் அதிர்ச்சி ஆகிய பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.

பொலிசார் இது தொடர்பாக பெற்றோருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

மேலும் இவ்வகை மிட்டாய்கள் புழங்குவதைக் கண்டால் உடனே பொலிசாருக்கு தகவலளியுங்கள் என பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கஞ்சாவை போதைக்காக பயன்படுத்துவது சட்ட விரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here