லண்டனில் மாயமாகிய 13 வயது சிறுமி… கவலையில் குடும்பத்தார்

0

லண்டனில் Nellie Smith 13 வயது சிறுமி Horshamல் இருந்து கடந்த 20ஆம் திகதி மாலை 7 மணியளவில் தனது பாட்டியை காண அவர் வீட்டை நோக்கி சென்றுள்ளார்.

அதன் பின் அச்சிறுமி மாயமாகியுள்ளார்.

தற்போது வரையில் Nellie கண்டுபிடிக்கப்படாத நிலையில அவர் வடக்கு லண்டனில் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

வடக்கு லண்டனின் Barnet, Harrow போன்ற பகுதிகளில் அவர் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

சிறுமி Nellie தனது தாயாரை காணவும் சென்றிருக்கலாம் என பொலிசார் கூறுகின்றனர்.

Nellie குறித்து அவர் உறவினர்கள் சிலர் உருக்கமான பதிவுகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

Roseanna Smithன் பதிவில், Nellie தனது தலையில் கருப்பு சாயம் பூசியிருக்கலாம்.

6 நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள அவரை யாராவது கண்டால் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.

Nellie பாதுகாப்பு குறித்து குடும்பத்தாருக்கு கவலை ஏற்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here