லண்டனில் மதுபான விடுதி ப்ரீசருக்குள் ஆணின் சடலம்…!

0

லண்டனில் கைவிடப்பட்ட மதுபான விடுதியின் ப்ரீசருக்குள் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2012 முதல் மாயமானதாகவும், அவரது பெயர் ராய் பிக் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிழக்கு லண்டனில் செயல்பட்டு வந்த Simpson மதுபான விடுதியிலேயே குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், கைவிடப்பட்ட நிலையில் உள்ள சிம்ப்சன் மதுபான விடுதியில் கட்டுமான ஊழியர்கள் பணிபுரியும் போது தொடர்புடைய நபரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவரது பல் பதிவுகள் மூலம் அவர் ராய் பிக் என்பதை அடையாளம் கண்டுள்ளனர்.

ராய் பிக் மாயமாவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் பொலிசாரை தொடர்பு கொண்டு தெரிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள்து.

மேலும், அந்த மதுபான விடுதி ப்ரீசருக்குள் ராயின் சடலம் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

கடைசியாக அவர் யார் யாரை சந்தித்தார்.

அவரது நடவடிக்கைகள் பழக்க வழக்கங்கள் என அவரை நன்கு அறிந்தவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here