மத்திய லண்டனில் பொது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸாருக்கும், போராட்டகார்களுக்கும் இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளது.
போராட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறயமைக்காக ஈடுபட்ட 13 பேர் வரையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாத பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் முடக்கல் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறும், பொது மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.