லண்டனில் போராட்டக்காரர்களால் தாக்குலுக்குள்ளாகிய பொலிஸார்….

0

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Hyde Park அருகே, ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

இதில், போராட்டக்காரர்கள் மற்றும் பொலிசாருக்கிடையே மோதல் நிலவியது

இதில் போராட்டக்காரர்கள், பொலிசார் மீது பாட்டில்கள வீச ஆரம்பித்த நிலையில் பொலிசார் பல காயமடைந்துள்ளனர்.

இதில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்றில், பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்ட அவர் இரத்த காயங்களுடன் இருப்பதை பார்க்க முடிகிறது.

மற்றொரு பொலிசாரின் நெற்றியில் இரத்தக் காயம் இருப்பதை காண முடிகிறது.

இதையடுத்து அந்த இரண்டு பொலிசாரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இந்நிலையில், மெட் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்ஸ்போர்டு தெருவில் நடந்த ஆர்ப்பாட்டட்த்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைக்காரர்களிடம் உங்கள் முகமூடிகளை கழற்றுங்கள் என்று கூச்சலிடுவதைக் கண்டனர்.

இதையடுத்து, மோதல் ஏற்பட, பேரணியில் கலந்து கொண்ட ஐந்து பேர் பொலிசார் மீதான தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here